இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்தில் 637 பேர் கரோனா தொற்றால் பாதிப்பு..

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 28 ஆயிரத்தில் 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 551 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து 3-வது நாளாக நாள்தோறும் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 28,637 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்து 553 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 34 ஆயிரத்து 620 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 92 ஆயிரத்து 258 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 551 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்பு 22 ஆயிரத்து 634 ஆக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக நேற்று 223 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் 70 பேர், தமிழகத்தில் 69 பேர், டெல்லியில் 34 பேர், மேற்கு வங்கத்தில் 26 பேர், உத்தரப் பிரதேசத்தில் 24 பேர், ஆந்திராவில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிஹாரில் 12 பேர், குஜராத், ஜம்மு காஷ்மீரில் தலா 10 பேர், தெலங்கானாவில் 9 பேர், அசாம், பஞ்சாப்பில் 8 பேர், ஹரியாணாவில் 7 பேர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் தலா 6 பேர், ஒடிசாவில் 5 பேர், கோவாவில் 3 பேர், புதுச்சேரி, திரிபுராவில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

”மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 10,116 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,334 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,032 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,898 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 906 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 644 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 913 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 503 ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 348 ஆகவும், ஹரியாணாவில் 297 ஆகவும், ஆந்திராவில் 309 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 613 பேரும், பஞ்சாப்பில் 195 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 169 பேரும், பிஹாரில் 131 பேரும், ஒடிசாவில் 61 பேரும், கேரளாவில் 29 பேரும், உத்தரகாண்டில் 46 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 23 பேரும், அசாமில் 35 பேரும், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசத்தில் தலா 2 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 18 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,36,935 ஆக உயர்ந்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 226 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 85,915 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,10,921 பேராக அதிகரித்துள்ளது. 87,692 பேர் குணமடைந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 40,091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,649 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 23,748 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 17,201 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 35,092 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 28,453 பேரும், ஆந்திராவில் 27,235 பேரும், பஞ்சாப்பில் 7,587 பேரும், தெலங்கானாவில் 33,402 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 10,156 பேர், கர்நாடகாவில் 36,216 பேர், ஹரியாணாவில் 20,582 பேர், பிஹாரில் 15,373 பேர், கேரளாவில் 7,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,963 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 11,956 பேர், சண்டிகரில் 555 பேர், ஜார்க்கண்டில் 3,613 பேர், திரிபுராவில் 1,918 பேர், அசாமில் 15,536 பேர், உத்தரகாண்டில் 3,417 பேர், சத்தீஸ்கரில் 3,897 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,182 பேர், லடாக்கில் 1,077 பேர், நாகாலாந்தில் 748 பேர், மேகாலயாவில் 207 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹாவேலியில் 471 பேர், புதுச்சேரியில் 1,337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 690 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 227 பேர், சிக்கிமில் 151 பேர், மணிப்பூரில் 1,593 பேர், கோவாவில் 2,368 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்”.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா பெங்களுருவில் கைது..

ரூ.10 க்கு உணவு தந்து ஏழைகளின் பசி போக்கி வந்த மதுரை ராமு தாத்தா காலமானார்…

Recent Posts