தங்க விலை சவரனுக்கு ரூ. 224 அதிகரித்து ரூ.40,824 ஆக உயர்வு…

கிடு கிடு வென தங்கம் விலை தொடர்ந்து 10வது நாட்களாக அதிகரித்து சவரன் 41 ஆயிரத்தை நெருங்கியது.

தங்கம் விலை கடந்த 20ம் தேதி முதல் தொடர்ச்சியாக உயர்ந்து புதிய சாதனை படைத்து வருகிறது. ஜூலை 20ம் தேதி ஒரு சவரன் ரூ.37,616, 21ம் தேதி ரூ.37,736க்கும், 22ம் தேதி ரூ.38,184, 23ம் தேதி ரூ.38,776க்கும், 24ம் தேதி ரூ.39,080க்கும், 25ம் தேதி ரூ.39,232க்கும், 27ம் தேதி ரூ.40,104க்கும் விற்பனையானது.

தொடர்ந்து 8வது நாளானநேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,037க்கும், சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,296க்கும் விற்கப்பட்டது. 9வது நாளாக நேற்றும் ராம் ரூ.5,075க்கும்,சவரன் ரூ.40,600க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று காலை தொடர்ந்து 10வது நாட்களாக தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு ரூ.28 அதிகரித்து கிராம் ரூ.5,103க்கும், சவரனுக்கு ரூ.224 உயர்ந்து சவரன் ரூ.40,824க்கும் விற்பனையானது.

இது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். கடந்த 10 நாட்களில் மட்டும் தொடர்ச்சியாக தங்கம் விலை ரூ.3,208 அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை உயரும் என்று கூறப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 60 காசு குறைந்து ரூ.71.20க்கு விற்பனையாகிறது.

3-ம் கட்ட ஊரடங்கு தளர்வு: பள்ளி, கல்லூரிகளுக்கு தடை தொடரும் மத்திய அரசு அறிவிப்பு..

புதிய தேசிய கல்விக் கொள்கை ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் :கனிமொழி எம்பி..

Recent Posts