தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 860 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 54 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் தொற்றால் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 236 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 72 ஆயிரத்து 251 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தொற்று தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 127 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் வைரஸ் தொற்று தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளது.