தமிழகத்தில் மேலும் புதியதாக 5,870 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 870 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 870 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 859 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 366 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் கரோனா வைரஸ் தொற்று தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று தாக்குதலுக்கு உயிரிழந்தோர் ர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 748 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் உள்ள உணவகங்களில் ஏசி-யை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி…

Recent Posts