இந்தியா முழுவதும் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கரோனா, தொற்று..

உலகிலேயே முதன்முதலாக இந்தியாவில் தான் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 90,600 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 70 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் உள்ள கரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரே நாளில் 90,600 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உலகிலேயே முதன்முதலாக இந்தியாவில் தான் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் ஒரே நாளில் 70,072 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதாவது 77.23 சதவீதம் குணமடைந்துள்ளனர் உள்ளது, 1.73 சதவீதம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கரோனாவால் சுமார் 2 கோடியே 70 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

8 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் தொற்று பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலுக்கு மிக நெருக்கமானதாக உள்ளது.

2020 ஐபிஎல் போட்டி தொடருக்கான கால அட்டவணை வெளியீடு..

மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…

Recent Posts