சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்..

பிரபல சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதத்தினால் முடங்கியதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதியில்லாததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வடிவேல் பாலாஜி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

45 வயதான நடிகர் வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரின் திடீர் மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக சின்னத்திரையில் பிரபல நடிகராக வடிவேலு பாலாஜி விளங்கினார். மதுரையில் பிறந்த அவர் திரைப்பட நடிகர் வடிவேலு மீது அளப்பரிய அன்பு கொண்டவர். அதனாலே தன் பெயருக்கு முன்னால் வடிவேலு என்ற பெயரை சேர்த்துக் கொண்டார்.

நடிகர் வடிவேலுவின் சாயல் இருப்பதால், அவரைப் போல் உடை அணிந்தவாறு ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகமாகி பிறகு கோலமாவு கோகிலா உள்பட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கொரோனா பரவல் காலத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது, தனது வீட்டில் இருந்தபடியே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி காணொளி ஒன்றை சமூக ஊடகங்களில் வடிவேல் பாலாஜி பகிர்ந்து கொண்டார். அப்போது கூட அவர் புன்னகை முகத்துடனேயே காணொளியில் பேசியிருந்தார்.

அவரது திடீர் மரணம், திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை ரத்து : கனிமொழி எம்.பி கண்டனம்..

இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் :தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு கோரிக்கை…

Recent Posts