நீட் தேர்வு மாணவர்களை நிலைகுலைய செய்வதை அனிதா மரணம் முதல் ஜோதி துர்கா வரை உணரமுடிகிறது: மு.க ஸ்டாலின் வேதனை..

நீட் தேர்வு மாணவர்களை நிலைகுலையச் செய்வதை அனிதா மரணம் முதல் ஜோதி துர்கா வரை உணரமுடிகிறது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீண்டும் சொல்கிறேன் தற்கொலை என்பது தீர்வு அல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் நடக்கும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல; மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். நீட் தேர்வை நடத்துவதில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதற்கு எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா அதிகரிக்கும் சூழலில் நீட் தேர்வை நடத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கு யார் பொறுப்பு ஏற்பது? மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. நீட் தேர்வை நடத்துவதில் பிடிவாதமாக இருப்பது குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் நீட் திணிக்கப்படுவதால் தற்கொலைகள் தொடர்கதையாகி வருவதாக கே.பாலகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார். தற்கொலை பற்றி மத்திய அரசும் நீதிமன்றமும் எந்த கவலையும் இல்லாமல் நடந்துகொள்வதை ஏற்க முடியவில்லை. தற்போதைய சூழலில் மாணவர்கள் முழு திறனோடு தேர்வில் பங்கேற்பது சாத்தியம்தானா? என்றும் கே.பாலகிருஷ்ணன் வினவியுள்ளார்.

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய தமிழக அரசு வாய்மூடி மவுனியாக இருப்பது வேதனையாக உள்ளது என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார். மாணவி ஜோதி துர்கா தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தற்கொலைக்கு முன் மதுரை மாணவி ஜோதி துர்கா நீட் தேர்வு குறித்து எழுதிய கடிதம் நெஞ்சை உருக்குகிறது.

நீட் தேர்வால் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் துயரம் இன்னும் எத்தனை நாட்கள் தொடருமோ? என்று டி.டி.வி தினகரன் வினவியுள்ளார். நீட் தேர்வு அச்சம் இன்னோர் உயிரை வாங்கியிருக்கிறது என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார். மதுரை மாணவி ஜோதி துர்கா குடும்பத்துக்கு ஆறுதல்சொல்ல முடியாமல் நெஞ்சம் விம்முகிறது என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டுமே மாணவர்கள் தற்கொலைக்கு தீர்வு காண முடியும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமாவது நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நீட் மரணங்கள் தற்கொலை அல்ல; மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே: திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்..

எல்லை தாண்டி சென்ற 5 இந்தியர்கள் சீனா ராணுவ பிடியிலிருந்து விடுவிப்பு..

Recent Posts