இந்தியாவில் ஒரே நாளில் 92,605 பேர் கரோனா தொற்றால் பாதிப்பு:

இந்தியாவில் ஒரே நாளில் 92,605 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்ந்துள்ளது

நாடு முழுவதும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 54.00 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 86 ஆயிரத்தை தாண்டியது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், உயிரிழந்தோர் விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கரோனா தொற்றால் புதிதாக 92,605 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,00,620 ஆக உயர்ந்தது.

  • இன்று 1,133 பேர் உயிரிழந்துள்ளனர்
  • இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 86,752 ஆக உயர்ந்தது.

.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 94,612 பேர் குணமடைந்துள்ளனர்;
.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 43,03,043 ஆக உயர்ந்துள்ளது.

  • இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,10,824 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • குணமடைந்தோர் விகிதம் 79.28% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.61% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 19.10% ஆக குறைந்துள்ளது.
  • இந்தியாவில் ஒரே நாளில் 12,06,806 லட்சம் கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
  • இதுவரை 6,36,61,060 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 3-ஆம் இடம்..

நீட்டை தடை செய்ய வலியறுத்தி மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் :வைரலாகும் புகைப்படம்..

Recent Posts