அக்டோபர் 5- ஆம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை தெற்கு ரயில்வே அறிவிப்பு..

புறநகர் ரயில் சேவை வரும் 5-ம் தேதி தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க புறநகர் ரயில் சேவை தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே ரயிலுக்குள் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம்.
திங்கள் முதல் தொடங்கப்படும் புறநகர் ரயிலில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை எனவும் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவையில் இருப்போர் மட்டும் பயணிக்க அக்டோபர் 5 முதல் புறநகர் ரயில் சேவை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைக் காட்டி பயணிக்கலாம்.

திருப்பதி திருமலை கோயிலில் அக்., 16ஆம் தேதி முதல் நவராத்திரி பிரமோற்சவத்திற்கு பக்தர்கள் அனுமதி..

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை நீதிக்கேட்டு நாளை கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி….

Recent Posts