அண்ணா பல்கலைக்கழகம் காவி மயமாக்க முதல்வர், துணை வேந்தர் ரகசியக் கூட்டணியா? மு.க. ஸ்டாலின் கேள்வி.

அண்ணா பல்கலைக்கழகத்தை காவி மயமாக்க முதல்வர், துணை வேந்தர் ரகசியக் கூட்டணியா? மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியுளளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதற்கான உயர்சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்றும் முக்கிய முடிவை எடுத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதத் துணைவேந்தர் சூரப்பா என்ன மாநிலத்தின் மற்றொரு முதலமைச்சரா?
69% இடஒதுக்கீடு குறித்து மத்திய பா.ஜ.க. அரசு எந்த உத்தரவாதமும் அளிக்காத நிலையிலும், உயர்சிறப்பு அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறார்!
இதற்கு ரகசிய அனுமதி அளிக்கத்தான் ஆளுநரைச் சந்தித்தாரா முதலமைச்சர் திரு. பழனிசாமி?
அண்ணா பல்கலைக் கழகத்தை காவிமயமாக்க முதலமைச்சர் – ஆளுநர் – துணைவேந்தர் கூட்டணியா?
துணைவேந்தர் கடித விவகாரத்தில் அ.தி.மு.க. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்!
எனக் குறிப்பிட்டுள்ளார்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.39,096-க்கு விற்பனை…

வடகிழக்கு பருவமழைக்கு தமிழகத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி முதல்வர் ஆலோசனை…

Recent Posts