தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,00,193-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,
- தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,00,193 -ஆக அதிகரித்துள்ளது.
- தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,55,170 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,314 பேர் குணமடைந்துள்ளனர்.
- தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,825 ஆக உயர்ந்துள்ளது.
- சென்னையில் இன்று ஒரே நாளில் 833 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில் இதுவரை 92,75,108 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 81,259 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 197 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 34,198
பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். - தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,22,711 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,829 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,77,450 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,248 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.
- வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.