தமிழகத்தில் இன்று புதிதாக 2,504 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் இன்று புதிதாக 2,504 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று (நவ. 1) வெளியிட்டுள்ள விவரங்கள்:

“தமிழகத்தில் இன்று புதிதாக 2,504 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 1,509 பேர், பெண்கள் 995 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 799 பேர், பெண்கள் 2 லட்சத்து 88 ஆயிரத்து 195 பேர், மாற்றுப்பாலினத்தவர்கள் 32 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 25 ஆயிரத்து 926 பேர். 13-60 வயதுக்குட்பட்டோர் 6 லட்சத்து 11 ஆயிரத்து 389 பேர். 60 வயதுக்கு மேற்பட்டோர் 89 ஆயிரத்து 711 பேர்.

இன்று புதிதாக 73 ஆயிரத்து 12 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 29 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது.

இன்று புதிதாக 71 ஆயிரத்து 797 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 97 லட்சத்து 60 ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 15 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 15 பேர் என, 30 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 2 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 28 பேர்.

தமிழகம் முழுவதும் தற்போது வரை 20 ஆயிரத்து 994 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 3,644 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 94 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அரசு சார்பாக 66, தனியார் சார்பாக 137 என, 203 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னை நிலவரம்

இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 686 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 533 ஆக உயர்ந்துள்ளது. இன்று 792 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 89 ஆயிரத்து 866 ஆக அதிகரித்துள்ளது. இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3,662 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை சென்னையில் 7,005 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்”.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசம் என்ற தோ்தல் வாக்குறுதி விதிமுறைகளை மீறியதாக அமையாது: தோ்தல் ஆணையம் அறிவிப்பு..

“தமிழ் மக்களின் உரிமை காக்க, எதிர்காலம் செழிக்க தமிழகத்தை மீட்போம்” : மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை…

Recent Posts