எகிறும் காய்கறி விலை … :அடிப்படை விலை நிர்ணயிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்..

விவசாய விரோத வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை தேவை என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
விவசாய விரோத வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். எதிர்ப்புக்கிடையே நிறைவேறியுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகள் வாழ்வில் காரிருள் சூழ்ந்துள்ளது எனவும் கூறினார்.
விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி தீபாவளி நேரத்தில் இடைத்தரகர்களால் விலையேற்றம் உருவாக்கும் என கூறினார்.

  • விவசாய விரோத வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கேரளா போல் காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யும் சட்டத்தை கொண்டுவர வேண்டும்.
  • எதிர்ப்புக்கிடையே நிறைவேறியுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகள் வாழ்வில் காரிருள் சூழ்ந்துள்ளது.
  • வெங்காயம், சமையல் எண்ணெய், பருப்பு, உருளைக்கிழங்கு, காய்கறிகள் பெருமளவில் பதுக்கப்பட்டுள்ளன.
  • விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி தீபாவளி நேரத்தில் இடைத்தரகர்களால் விலையேற்றம் உருவாக்கப்படுகிறது.
    வரம்பற்ற பதுக்கலுக்கு வழிவகுக்கும் வேளாண் சட்டங்களால், காய்கறி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை எகிறிக் கொண்டிருக்கிறது.
    இவற்றில் இருந்து மக்களைக் காக்கவும், விவசாயிகள் நலனுக்காகவும் பஞ்சாப், கேரள மாநிலங்களின் அரசுகள் சட்டங்களை இயற்றுகின்றன. போலி விவசாயி முதலமைச்சர் திரு. பழனிசாமி என்ன செய்கிறார்?
    திமுக ஆட்சியில் ‘விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம்’, ‘காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யும் சட்டம்’ ஆகியவற்றை இயற்றி #தமிழகம்_மீட்போம். இது உறுதி!

இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்க வழக்கு : அவசர வழக்காக நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை …

2021 சட்டப்பேரவைத் தேர்தல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை..

Recent Posts