ரூ.25 கோடி டெண்டரை பத்து முறை தள்ளி வைத்து 900 கோடி ரூபாயாக உயர்த்தியது ஏன்? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ‘‘அதிவிரைவாகச் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை கண்காணிக்கும் கேமரா அமைப்பதற்கான ரூ.25 கோடி டெண்டரை பத்து முறை தள்ளி வைத்து 900 கோடி ரூபாயாக உயர்த்தியது ஏன்? அரசுப் போக்குவரத்து துறையில் 4 ஆண்டுகளில் 6 செயலாளர்களை நியமித்து முறைகேட்டில் ஈடுபடுவதா?.
மக்களின் பாதுகாப்பு தொடர்பான பணிகளிலும் ஊழல் செய்கிறோமோ என்ற மனசாட்சி உறுத்தலே இல்லாமல், இப்படி டெண்டர் நிபந்தனைகளில் மிக மோசமான திருத்தங்களைச் செய்வதில் ஈடுபட்டு, அரசு கஜானாவை காலி செய்யும் மட்டரகமான, வெட்கக்கேடான செயல்களில் எடப்பாடி அதிமுக அரசு ஈடுபடுவது மகா கேவலான போக்கு’’ எனத் தெரிவித்துள்ளார்.