முதல்வர் கொடுத்த பரிசு தங்கமல்ல. முதல்வரும் தங்கமல்ல” : காரைக்குடியில் கனிமொழி எம்.பி.,பேச்சு..

காரைக்குடி அண்ணா சிலை அருகே கனிமொழி எம்.பிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தபோது

காரைக்குடி வைரவபுரத்தில் காக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக மகளிரணி செயலாளரும்,மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி., கலந்து கொண்டு பேசினார் . அப்போது

காரைக்குடி பெரியார் சிலைக்கு கனிமொழி எம்.பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தமிழகத்தின் உரிமையை மத்திய பாஜக ஆட்சியிடம் முதலமைச்சர் பழனிச்சாமி அடகு வைத்துவிட்டதாக கனிமொழி குற்றசாட்டியுள்ளார்.

காரைக்குடி வைரவபுரத்தில் நடைபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். உடன் சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் பெரிகருப்பன்

கிராமப்புறங்களில் மருத்துவர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்திவிட்டது பழனிசாமியின் அதிமுக ஆட்சி என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

காரைக்குடி வைரவபுரத்தில் நடைபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில்

மேலும் விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் பழனிச்சாமி விவசாயியா என கேள்வியெழுப்பியுள்ளார்.

காரைக்குடி வைரவபுரத்தில் நடைபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில்


ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்வர் கொடுத்த பரிசு தங்கமல்ல. முதல்வரும் தங்கமல்ல: முதல்வர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. பின்னர் முதலீட்டாளர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் – காரைக்குடி கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி.பேசினார்.

காரைக்குடி கம்பன் கழகத்தில் அமைந்துள்ள தமிழ்தாய் கோயிலுக்கு கனிமொழி எம்.பி.,வருகை புரிந்தபோது

முன்னதாக காரைக்குடியில் கனிமொழி எம்.பிக்கு திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார் அதனைத் தொடர்ந்து கம்பன் கழகத்தில் அமைந்துள்ள தமிழ்தாய் கோயிலுக்குச் சென்றார்.

தமிழ்தாய் கோயிலில் தமிழ்தாயை கனிமொழி எம்.பி.,வணங்கியபோது

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

திருத்தணியில் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளிவேல் கொடுத்து மரியாதை..

ஜன., 29 முதல் புது வியூகத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” தேர்தல் பரப்புரை: கோபாலபுரத்தில் மு.க.ஸ்டாலின் பேட்டி..

Recent Posts