தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கில் மேற்குதிசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக நீலகிரி கோத்தகிரியில் 9, குன்னூரில் 7, செத்துப்பாறையில் 6, அலகாரியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்;
சில இடங்களில் லேசான மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியின் பிற இடங்களில் நாளை மறுநாள் வரை மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.