பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?: ப.சிதம்பரம் கேள்வி..

காரைக்குடியில் முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது

பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்? என ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
காரைக்குடியில் காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் காங்கிரஸ் முகவர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களிடம் மிகவும் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றார். முடிவுகள் நள்ளிரவில் வரலாம் அல்லது மறுநாள் காலையில் வரலாம் என்று பேசினார்.

காரைக்குடி காங்கிரஸ் அலுவலக்த்தில் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் காங்கிரஸ் முகவர்களுக்கு அறிவுரை வழங்கியபோது


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ப.சிதம்பரம். பெரும் துயரை திருவிழாவாக கொண்டாடுவது எப்படி என்றார். தடுப்பூசி மருந்து குறித்து மத்திய அரசு் காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளை உச்சநீதிமன்றம் தற்போது கேட்டுள்ளது. தடுப்பூசிகளுக்கு வெவ்வேறு விலை என்ன நியாயம்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர் எழுப்பிய இந்தியா குறித்து கேள்விக்கு திரும்ப வந்து பதிலளித்தார் . இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால், நம் பிரதமர் மோடியோ இக்கட்டான சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்திக்க மறுக்கிறார் என்றார்.


தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு நான் பதிலளிப்பதில்லை, ஆனால் வெற்றிச் செய்தி வரும், பாண்டிச்சேரி தேர்தல் குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
ஸ்டெர்லைட் குறித்த கேள்விக்கு உச்சநீதிமன்றம் மருத்துவ ரீதியான ஆக்ஸிஜன் தயாரிக்க மட்டுமே அனுமமதி வழங்கியுள்ளது என்றார்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி..

பாரத ஸ்டேட் வங்கியில் 5000 Junior Associates வேலைவாய்ப்பு…

Recent Posts