கரோனா உயிரிழப்பு அதிகரிப்பு :முழுஊரடங்கு மட்டும்தான் தீர்வு: ராகுல் காந்தி ..

நாட்டில் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் 2-வது அலையைத் தடுத்த நிறுத்த முழு ஊரடங்கை செயல்படுத்துவதுதான் ஒரே வழி என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை மோசமான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாள்தோறும் 3.50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழக்கிறார்கள்.
இந்தியாவில் நிலவும் சூழலைப் பார்த்து உலகில் உள்ள பல்வேறு மருத்துவ வல்லுநர்களும், தொற்றுநோய்தடுப்பு வல்லுநர்களும் லாக்டவுன் மட்டுமே தீர்வு என்று தெரிவித்துள்ளனர். மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநிலங்கள் 14 நாட்கள் லாக்டவுனை பிறப்பிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளன. ஆனால், பொருளாதாரம் பாதிக்கும் என்ற நோக்கில் பல மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன், பயணத்தில் கட்டுப்பாடு, எல்லைகளை மூடுதல் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தியுள்ளது.
பொருளதாார ரீதியாக நலிந்த மக்கள், ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோருக்கு நியாய் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மத்திய அரசுக்கு எந்த யோசனையும் கிடைக்கவில்லை. நாட்டில் பரவிவரும் கரோனா வைரஸ் 2-வது அலையைத் தடுத்து நிறுத்த ஒரே வழி, முழுமையான லாக்டவுனை நாட்டில் கொண்டுவருவதுதான்

அதேசமயம், முழு லாக்டவுன் கொண்டுவரும்போது, ஏழைகள், எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள் ஆகியோரின் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் நியாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், உதவித்தொகை வழங்கிட வேண்டும். மத்திய அரசு செயல்பாடின்றி இருப்பதால் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள்” என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி: சுகாதாரத்துறை அறிவிப்பு..

பிஎஸ்என்எல், ஜியோ உள்பட தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு 5 ஜி சோதனைக்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அனுமதி.

Recent Posts