அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ அனந்தகிருஷ்ணன் (92) கரோனா பாதிப்பால் காலமானார்.
அண்ணா பல்கலைக்ழகத்தில் இருமுறை துணைவேந்தராக பணியாற்றிவரும்,கான்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் தலைவராக இருந்தவரும்,ஐநா சபையில் 10 ஆண்டுகள் உறுப்பினராக பணியாற்றியவருமான கல்வியாளர் முனைவர் மு.அனந்தகிருஷ்ணன் நுரையீரல தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளி்காமல் உயிரிழந்தார்.
திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியில் பிறந்த அனந்த கிருஷ்ணன்,கிண்டி பொறியியல் கல்லுரியில் கட்டட பொறியாளர் துறையில் பட்டம் பெற்று,அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா கல்லுாரியில் முதுகலை பொறியியல் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார்.
இந்தியா திரும்பிய அவர் டெல்லியில் உள்ள மத்திய சாலை ஆராய்ச்சிக் கழகத்தில் முதுநிலை அறிவியல் அலுவலராகவும்,இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் பேராசிரியர் மற்றும் தலைவராகவும் பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஐநா அவையில் இந்திய துாதரக அறிவியல் ஆலோசகர்,ஐநா அவையின் அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடு மையத்தின் துணை இயக்குனர் மற்றும் இந்த மையத்திற்கான ஐ.நா ஆலோசனைக் குழுவின் செயலராக பணியாற்றினார்.
பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருமுறை துணைவேந்தராக பணியாற்றி கல்வியில் பல மாற்றங்களைச் செய்யக் காரணமானவர். நுழைவுத் தேர்வை ரத்து செய்ய பரிந்துரைத்து. ஒற்றை சரள முறையை நடைமுறைக் கொண்டுவந்தார். நாட்டில் முதன் முறையாக செமஸ்டர் தேர்வு முறையைக் கொண்டு வந்து வழிகாட்டியவர்.ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி ஒளி வழங்க காரணமாக இருந்தவர்.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின் ஆளுமை துறையின் ஆலோசகராக இருந்தவர். இவர் 4 நுால்களை எழுதியுள்ளார். 90-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.கணனியிலும்,இணையத்திலும் தமிழை கொண்டுவந்து வெற்றிகண்டவர்.
2002-ஆம்ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.