கரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது உச்சத்தில் இருப்பதால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அmறிவித்துள்ளது.
ஒன்றிய அரசு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளது.
முன்னதாக மாநில கல்வி அமைச்சகம் பெற்றோர் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியது. அதனைத் தொடர்ந்து சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசனை பெற்றது. இறுதியாக மாணவர்கள் நலன் கருதி தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்
இறுதியாக மாணவர்கள் நலன் கருதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
12-ஆம் வகுப்பு மாணவர்ளுக்கு மதிப்பெண்களை எவ்வாறு வழங்குவது என்பதை முடிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்.இக்குழு சமர்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.
அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும்.
பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வை நடத்துவது உகந்ததாக இருக்காது.என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.