காரைக்குடி செஞ்சை பகுதியில் 2017- ஆம் ஆண்டு ஒன்றிய அரசு நிதியில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 2 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சாயப்பட்டரை மற்றும் கைத்தறி,சேலை விற்பனையகக் கட்டிடம் கட்டி முடித்து ஓராண்டு ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் திறந்து வைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது..இந்நிலையில் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பழனியப்பன்,செயலாளர் மணி மற்றும் டைரக்டர் அமுதா உள்ளிட்ட பலர் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர். எஸ்.மாங்குடி அவர்களைச் சந்தித்து செயல்படாமல் உள்ள சாயப்பட்டறையையும் கட்டி முடிக்கப்பட்டுள்ள கைத்தறி கூடத்தையும் திறக்க வழி செய்து நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமால் செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்களை பார்வையிட்டார். பின்னர் சாயப்பட்டறை மற்றும் கைத்தறி சேலை விற்பனையகத்திற்கு தேவையான அனைத்து உபகரனங்ளையும் பெற்று இவை இயங்க வழி செய்வதாக உறுதியளித்தார்.
கூட்டுறவுத் துறை அமைச்சரையும் சந்தித்து இது குறித்து நல்ல தகவல் வெளியிடட்ப்படும் எனத் தெரிவித்தார்.
அவருடன் காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன் உடனிருந்தார்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்