எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டு ரைடில் சிக்கியது என்ன?

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை, கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சாயப்பட்டறை, உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ஜிபிஎஸ் கருவி வாங்கியதில் முறைகேடு என புகார் எழுந்த நிலையில், இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தச் சோதனை குறித்து லஞ்சஒழிப்புத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 13 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில், ரூ.25.56 லட்சம் மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நிறைவு பெற்றது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ஜிபிஎஸ் கருவி வாங்கியதில் முறைகேடு என புகார் எழுந்த நிலையில், இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.

வீக் எண்டுக்குப் பிறகு தெரியும்: எடியூரப்பா விரக்தி

அறையெங்கும் மழை மேகங்கள்: அய்யப்ப மாதவன்

Recent Posts