மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்குடி அனைத்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக மரக்கன்று நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் மரக்கன்றை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் காரைக்குடி அனைத்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர். அப்துல் கலாம் நினைவு நாளில் தொடங்கிய மரம் நடும் பணி காரைக்குடி நகர் முழுவதும் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.
காரைக்குடி அனைத்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக மரக்கன்று நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இன்று காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் மரக்கன்றை நட்டு விழாவை துவக்கி வைத்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்