ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த இரு வாரங்களாக கோலாகலமாக நடைபெற்ற 2020 ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தது. 2020-ல் நடைபெறவிருந்த இந்த போட்டிகள் கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.
2021 சூலை -23-ஆம் தேதி பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டது.இந்தப் போட்டிகளில் 39 தங்கப் பதக்கங்களைப் பெற்ற அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
38 தங்கப் பதக்கங்களைப் பெற்ற சீனா பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ஒரு தங்கம் உள்பட ஏழு பதக்கங்களுடன் இந்தியா 48-வது இடத்தை பிடித்துள்ளது.
2024 ஒலிம்பிக், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது.
சரியாக 2024-ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று தொடங்க உள்ளது. 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடைபெற உள்ளது. சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.