தாலிபான்களை ஐஎஸ்ஐஎஸ் தலைமை ஆப்கனைக்கைப்பற்றியதோடு திருப்தியடைவது வெட்க கேடு.அமெரிக்கா வெளியேறியபின் தலிபான் படைகள் வீடுவீடாக சோதனை நடத்தி ஆட்களைக்கொன்று வருவதாய் தகவல்.
அங்குள்ளசிலைகளைஎல்லாம்
உடைக்கிறார்கள். பஞ்சரீஷ் ( ஐந்து சிங்கங்கள் ) பகுதிமக்கள் தாலிபான்களை எதிர்த்து உறுதியுடன் நிற்பதாய் சேதி . ஆப்கனில் இந்திய முதலீடுகள் அதிகம்.
ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கைக்குள் போய்விட்டது. ஆப்கானிஸ்தானில் நிரந்தர அரசு அமையாதது இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாகவே இந் நிலை தொடர்கிறது. இந்த நாட்டை கிரேக்கர்கள், பாரசீகர்கள், ஈரானியர்கள், மங்கோலியர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டபேரரசுகள்ஆட்சிசெய்
துள்ளன.
ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தானில் புத்த மதமும் இருந்தது. முகமது கஜினியின் காலத்தில் அங்கு இஸ்லாம் பரவியது. 1919-ல் மன்னர் அமானுல்லா கானின் காலத்தில் பெண்கள் பர்தா அணியாமல் இருக்கலாம், ஆண்கள் கல்வி கற்கலாம் என்ற நிலை இருந்தது. இதை எதிர்த்து உள்நாட்டு கிளர்ச்சி நடந்தது. 10 ஆண்டுகளில் மன்னர் அமானுல்லா கான் பதவியை விட்டு இறங்க நேர்ந்தது.
1979-ல் ஆப்கான் பிரதமராக இருந்த ஹபிசுல்லா அமீன் காலத்தில், எதிர்க்கட்சித் தலைவரான கம்யூனிஸ்ட் தலைவர் தாரகி படுகொலையானார். கம்யூனிஸ்ட் தலைவரை கொன்றதால் ஆத்திரமடைந்த ரஷ்யா, பிரதமர் அமீனைக் கொன்றது. ரஷ்ய ராணுவம் ஆப்கானிஸ்தானில் புகுந்தது. பல தீவிரவாத குழுக்களுக்கும் ரஷ்ய ராணுவத்திற்கும் தொடர்ந்து மோதல் நடந்தன. அமெரிக்கா தீவிரவாத குழுக்களுக்கு ராணுவரீதியாகஉதவியது. பின்1989-ல் ரஷ்யா வெளியேறியது.
ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்ட ஒரு குழுவும் வடக்கு பாகிஸ்தானில் உள்ள மதரஸாக்களிலிருந்து உருவானவர்களும் இணைந்து தாலிபான்கள் என்ற குழு உருவானது. தாலிபான்கள் என்பதற்கு மாணவர்கள்என்றுபெயர்தாலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவியது. 1996-ல் ஆஃப்கானிஸ்தான் அதிபர் ரப்பானியை தாலிபான்கள் விரட்டினர். ஆட்சி தாலிபான்கள் கைக்கு வந்தது.
சவுதி அரேபிய கோடீஸ்வரரான பின்லேடன், அல்கொய்தா இயக்கத்தை தொடங்கினார். இது தாலிபான்களுக்கு உதவியது. 2001-ல் அமெரிக்காவில் பின்லேடனின் அல்கொய்தா, உலக வர்த்தக மையத்தைத் தகர்த்தது. அப்போதுபின்லேடன்ஆப்கானிஸ்தானில் இருந்தார். அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க தாலிபான்கள் மறுத்ததால், அமெரிக்கா தாலிபான்கள் மீது போர் தொடுத்தது. ஹமீது கர்சாய் தலைமையில் அமெரிக்க ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்தது.
அமெரிக்க – நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இருந்து தாலிபான்களுடன் போரிட்டு வந்தன. பாகிஸ்தானில் இருந்த பின்லேடனை அமெரிக்கா வான் வழியாகச் சென்று கொன்றது. அமெரிக்கா மீது தாக்குதல் தொடுத்த அல்கொய்தாவின் தலைவரான பின்லேடன் கொல்லப்பட்டதும், அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அமெரிக்கா சிறிது சிறிதாக ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் என்று கூறினார். ட்ரம்ப் காலத்திலும் தொடர்ந்த அமெரிக்கத் துருப்புகளின் வெளியேற்றம், பைடன் காலத்தில் நிறைவு பெற்றது.தாலிபான்களின் கை மீண்டும் ஓங்கியது. இப்போது ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்களின் கையில் வந்துவிட்டது. ஆஃப்கானிஸ்தானில் ஜனாதிபதி கனி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். பல நாடுகளின் தூதரக ஊழியர்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்.
தாலிபான்கள் கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்துவதுவார்கள். ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும் பெண்கள் பர்தா அணிய வேண்டும் பெண் பிள்ளைகள் கல்வி கற்கக் கூடாது என்றெல்லாம் கடந்தகால தாலிபான்கள் ஆட்சிக்காலத்தில் வலியுறுத்தப்பட்டது. இதையே மீண்டும் தாலிபான்கள் தொடர்வார்கள் என்ற பயத்தினாலும் சண்டையினாலும் ஆப்கான் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற துடிக்கின்றனர். ஆஃப்கானிஸ்தானில் மேற்கே ஈரான் உள்ளது. கிழக்கு – தெற்குப் பகுதியில் பாகிஸ்தான் உள்ளது.
வடக்கே துருக்மெனிஸ்தான் உஸ்பெகிஸ்தான் கஜகிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளன வடகிழக்கின் ஒரு சிறிய பகுதி எல்லையை ஆஃப்கானிஸ்தான் சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறது பாகிஸ்தானுடனான எல்லையில் கடைசியில் 106 கிலோ மீட்டர் நீளமுள்ள சிறுபகுதி இந்திய எல்லையாக உள்ளது. இது இந்தியாவின் உயரே இமய மலையில் உள்ளது. இந்தப் பகுதி வழியாக போதை மருந்து கடத்தல் தீவிரவாதிகள் ஊடுருவுதல் நடக்க சாத்தியம் உள்ளது.
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தாலிபான்கள் நெருக்கமானவர்கள். ஆசியாவில் இருந்து அமெரிக்கப் படை வெளியேறி விட்டதால் சீனா மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்புக்கும், தாலிபான்களுக்கும் நெருக்கம் உண்டு. அமெரிக்கா தனது இராணுவத்திற்காவும், ஆப்கானிஸ்தானில் கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் 2001 முதல் 2019 வரை 978 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது. ஆனாலும் ஆஃப்கானிஸ்தானில் வறுமை ஒழியவில்லை.
1735-வரை ஏறக்குறைய நம் நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த ஆப்கானிஸ்தான், அடுத்த 90 ஆண்டுகள் ஈரான் கைவசம் சென்று, மீண்டும் நம் கைவசம் வந்தது. 2500 ஆண்டுகள் ஈரானும், நமது நாடும் தங்கள் எல்லைகளை மதித்து வந்தன. கலாச்சார ரீதியாக நமக்கும், ஈரானுக்கும் இருந்த பந்தத்தால், மற்ற முஸ்லிம் நாடுகள் நம் மீது படை எடுத்து வந்தாலும் ஈரான் நமக்கு எதிராக இல்லை.
18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் டெல்லியில் மொகலாயர்கள் ஆட்சி நலிந்தது. அதுதான் தருணம் என்று, இந்திய – ஈரான் இணக்கத்தைத் தகர்த்து, ஈரானைச் சேர்ந்த நதிர் ஷா, ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்து வென்றார். டெல்லி வரை வந்தார். வழி நெடுகிலும்ஆயிரக்கணக்கானவர்களைப் படுகொலை செய்து, கலாச்சார சின்னங்களை அழித்து சரித்திரத்தில் அழியாப் பழியைப் பெற்றார்.
ஆப்கானிஸ்தானை மறந்து விடுங்கள் என்று நதிர் ஷா கூறிவிட்டுச் சென்றதை, சவாலாக எடுத்துக் கொண்ட மகாராஜா ரஞ்சித் சிங், இன்றைய பாகிஸ்தான் முழுவதையும் கைப்பற்றி, மீண்டும் ஆப்கானிஸ்தானை 1823-ல் தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். 7000 படைவீரர்களை வைத்து 20000 பேர் கொண்ட பதான் படையை வீழ்த்திப் புகழ்பெற்ற தளபதி ஹரிசிங் நல்வாவை, 12000 பேர் கொண்ட படையுடன் அங்கேயே தங்கியிருக்க வைத்தார் மகா ராஜா ரஞ்சித் சிங். வடமேற்கு எல்லை வழியாக நமது நாட்டுக்கு எந்த ஆபத்தும் வராமலும் பாதுகாத்தார்.
நல்வா என்றாலே ஆப்கானிஸ்தான் நடுங்க ஆரம்பித்தது. அன்றைய ஆப்கானிஸ்தானில் குழந்தைகளைப் பயமுறுத்த நல்வாவின் பெயரைக் கூறுவார்களாம். அந்த அளாவுக்கு அவரைக் கண்டால் பயம். பிறகு ஆங்கிலேயர்கள் ஆஃப்கானிஸ்தானை கைப்பற்றினார்கள்.
ஆப்கானிஸ்தானின் பண்டைய பெயர்: காந்தாரம். திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி பிறந்த ஊரான காந்தாபெலித்தம் அங்குதான் இருக்கிறது. அதுதான் இன்று ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான கண்டஹார் நகரம். முதலில் ஹிந்து பெரும்பான்மையாக இருந்த ஆப்கானிஸ்தானில், 300 ஆண்டுகள் முன்புவரை அது பெரும்பான்மை மதமாக இருந்தது. கலை, சங்கீதம், இலக்கியம், சிற்ப சாஸ்திரம், விஞ்ஞானம் அனைத்திலும் உயர்ந்த காந்தாரக் கலை என்று உலகம் போற்றிய நாகரிக வாழ்க்கை அங்கு இருந்தது. (Winning in Afghanistan by Rakesh Sinha கட்டுரையில் பார்க்கலாம்) காந்தாரக் கலை. அதைத் தனது மூதாதையர் கலை என்று கொண்டாடுகிறது இஸ்லாமிய பாகிஸ்தான் அரசாங்கத்தின் இணையதளம். ஆஃப்கானிஸ்தானில் இன்று நடப்பதற்கும், அந்த உயர் கலாசாரத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தாலிபாந்தான் 1500 ஆண்டுகளுக்கு முன் பாமியன் மலையில் செதுக்கப்பட்ட பல புத்தர், சூரிய சிலைகளையும், பல சுவரோவியங்களையும் அடியோடு அழித்தது.
இந்தியாவுக்கு ஆபத்து:
ஆப்கானிஸ்தானில் அராஜகமும், பயங்கரவாதமும் ஆட்சி செய்வது, நம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்பதில் சந்தேகமே இல்லை. பயங்கரவாத தாலிபானை எதிர்காலத்தில், பாகிஸ்தான் நமக்கு எதிராகத் திருப்ப முயற்சி செய்யும் என்பதும் திண்ணம். காஷ்மீர் விஷயத்தில் அடிபட்ட புலியாக இருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனாதாலிபானுடன் சேர்ந்து நமக்குப் பிரச்சனையை உருவாக்கும். ஆப்கானிஸ்தானுக்கும், நமக்கும், பாகிஸ்தான் கைவசம் இருக்கும் கில்கிட்-பால்டிஸ்டான் பகுதி, காஷ்மீரை ஒட்டி 100 கி.மீ. எல்லையில் இருக்கிறது. அதன் வழியாக தாலிபான் பயங்கரவாதிகளைக் காஷ்மீருக்குள் நுழைக்க பாகிஸ்தான் முயற்சி செய்யும்.
எல்லை உள்படப் பல விஷயங்களில் தனக்குப் பணியாத இந்தியாவுக்கு, தாலிபானை வைத்து தொந்தரவளிக்க சீனா முயலும். எனவே, தாலிபானின் வெற்றியை நமக்கு எதிராகத் திருப்ப பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் வாய்ப்பு என்றே தோன்றுகிறது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் ஆட்சி அதன் எல்லை நாடுகளான உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலும் பயங்கரவாதத்தைப் பரப்பும் என்று நேட்டோ அமைப்புக்கான ரஷ்யத் தூதரான மித்ரி ரோகோஸின் 2011-லேயே கூறினார். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கா தோல்வி அடைந்தால், அதனால் ஊக்குவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் வடக்குப் பக்கம் பார்வையைத் திருப்புவார்கள். முதலில் தஜ்கிஸ்தானைத் தாக்குவார்கள், பிறகு உஸ்பெகிஸ்தானுக்குள் நுழைவார்கள். அப்படி நடந்தால் 10 ஆண்டுகளில் நேட்டோ வீரர்கள் முழு ஆயுதம் அணிந்த, கட்டமைப்புள்ள இஸ்லாமியப் பயங்கரவாதிகளுடன் போரிட வேண்டிவரும் என்று கூறினார் அவர். தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரஷ்யாவுடன் 7,600 கி.மீ நீள எல்லை இருக்கும் இஸ்லாமிய கசாகஸ்தானின் எல்லை நாடுகள். அதில் 2000 கி.மீ. மலைப்பகுதி. அதை 365 நாட்களும் பாதுகாத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் ஆட்சி செய்தால், ரஷ்ய எல்லை வரை பயங்கரவாதம் பரவும் அபாயம் இருக்கிறது.
இன்று பாகிஸ்தானுக்கு எழுந்துள்ள பேராபத்து நம்மால் அல்ல என்பது அதற்கும் தெரியும், உலகுக்கும் தெரியும். பயங்கரவாதத்தால்தான் பாகிஸ்தானுக்கு ஆபத்து. அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி செய்வது, பாகிஸ்தான் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்குப் பெரும் ஊக்கம் கொடுக்கும்; தாலிபான் அவர்களுக்கு உதவியும் செய்யும். தாலிபான் ஆட்சி நமக்கு எவ்வளவு ஆபத்தோ, அதை விட பாகிஸ்தானுக்கு அதிக ஆபத்து என்று தோன்றுகிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிட பாகிஸ்தானிய அரசு, ராணுவம், ஐ.எஸ்.ஐ. மூன்றுமே ஒன்று சேரவில்லை. நமக்கு எதிராக அவர்களுக்கு இருக்கும் பெரிய அஸ்திரமே பயங்கரவாதிகள்தான். பாகிஸ்தானுக்குள் அவர்களைத் தாக்கினால், அவர்களை வைத்து நம்மைத் தாக்க முடியாது.
Photo- courtesy-P.R.Rajan
மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
முகநுால் பதிவு