5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி: அடுத்தக்கட்ட சோதனைகளுக்கு ஒப்புதல்..

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியின் அடுத்த கட்ட சோதனைகளுக்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

சிறுவர்களுக்கு தடுப்பூசி அளிக்கும் பணி விரைவுபடுத்தபட்டால் பள்ளிகளை செயல்படுத்துவது சுலபமாகும் என கருதப்படும் நிலையில், ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ‘கோர்பேவாக்ஸ்’ என்ற கொரோனா தடுப்பூசி ‘பயாலஜிக்கல் இ’ என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள டிசிஜிஐ யின் ஒப்புதலை ‘பயாலஜிக்கல் இ’ நிறுவனம் செப்டம்பர் 1 ஆம் தேதி பெற்றது. இந்த தடுப்பூசி ஆர்பிடி புரத வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது: ராகுல் காந்தி விமர்சனம்..

ஊரக உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் 6-ம் தேதி ஆலோசனை..

Recent Posts