திருச்செந்தூர், சமயபுரம்,திருத்தணி கோயில்களில் 3 வேளை அன்னதானம்: திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் இந்து அறிநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்ளில் அன்னதானத்திட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அறநிலையத்துறை பழனி அருள்மிகு முருகன் கோயில் ,ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலிலும் 3 வேளை அன்னதானத் திட்டத்தை தொடங்கியது.
தற்போது திருச்செந்தூர் – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, சமயபுரம் – அருள்மிகு மாரியம்மன், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு, மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பேரறிஞர் அண்ணா 113-வது பிறந்ததினம்: காரைக்குடியில் அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மரியாதை..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2021 கார்த்திகை தீபத்திருவிழாற்கான பந்தகால் நடும் விழா…

Recent Posts