தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்ர்-14-ஆம் ஆண்ணா பிறந்தநாளன்று அண்ணா பதக்கம் வழங்கிவருகிறது தமிழக அரசு..
இந்தாண்டு காவல் துறையில் சிறப்பாக செயலாற்றிவருவோருக்கு தமிழக அரசு அண்ணாவிருது அறிவித்துள்ளது.இந்த விருதிற்கு சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி காவல்நிலையத்தில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றிவரும் கா.சுந்திரராசு தேர்வு செய்யப்பட்டுள்ளர்.
கா.சுந்தரராசு 1986 -ஆம் ஆண்டில் இரண்டாம் நிலைக் காவலராக சென்னை மாநகரத்தில் தனது பணியைத் தொடங்கினார். 2001 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பணிமாறுதலில் வந்தார் 2011-சிறப்பு உதவி ஆய்வாளரா பதவி உயர்வு பெற்றார்.2016 -ல் சிவகங்கை மாவட்டத்திற்கு பணிமாறுதல் பெற்று வந்த இவர் தற்போது குன்றக்குடி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
பணியில் எப்போதும் நேர்மையாக செயல்பட்டு வருகிறார் அதற்கு உதாரணமாக 2014 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனுார் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தபோது ஒருநாள் காவல்படை காவலர் கார்த்திக்ராஜாவுடன் நள்ளிரவு ரோந்து பணியின்போது குளத்துார் சிட்டி யூனியன் வங்கி அருகில் உள்ள புளிய மரத்தடியில் ஒரு மர்ம நபர் தலையில் மூட்டையுடனும்,கையில் பெட்டியுடனும் நின்று கொண்டிருப்பதை பார்த்து அவனிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது அவன் மூட்டையையும்,பெட்டியையும் விட்டு விட்டு ஓடிவிட்டான். இருட்டில் அவனை பிடிக்க முடியவில்லை. உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மூட்டை பெட்டியை திறந்தபோது அதில் 1045 சிறிய பிளாஸ்டிக் கவரில் ரசீது அட்டையுடன் 35 கிலோ தங்க நகைகள் இருந்தன. அதன் சந்தை மதிப்பு அப்போது ரூ.8 கோடி.
இந்த சிறப்பான பணிக்காக அவரைப் தமிழக காவல்துறை இயக்குனர் (சட்டம் ஒழுங்கு) பாராட்டி ரூ.5000 வெகுமதியளித்துள்ளார். இது போல் திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் ரூ.10,000 வெகுமதியளித்து பாராட்டியுள்ளார். இந்த சம்பவம் அன்றைய தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் வெளிவந்துள்ளது.
35 ஆண்டுகாலப்பணியில் தனது நேர்மையாக பணியாற்றி வரும் கா.சந்திரராசுக்கு தமிழக அரசு அண்ணா பதக்கம் அளித்து கவுரவிக்கிறது. நாமும் பாராட்டி கவுரவிப்போம்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்.