பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டைக் காப்பாற்ற முடியாது : திருமாவளவன் எச்சரிக்கை..

பா.ஜ.க 2024லில் மீண்டும்ஆட்சிக்கு வந்தால், நாட்டை எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க சென்ற முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்காரை தடுத்து நிறுத்தி கலவரம் செய்த பாஜகவை கண்டித்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன், காங்கி்ரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், “பாஜக தனது வன்முறை வெறியாட்டத்தை திரிபுராவில் தொடங்கி உள்ளதாகவும், திரிபுரா மட்டுமின்றி நாடு முழுவதும் பா.ஜ.க இதை தொடரும் என்றார். வன்முறை தான் தீர்வு என்றால் அவர்களை விட அதிகமாக தங்களுக்கு ம்வன்முறை செய்யத்தெரியும் எனவும், ஆனால் அதனை தாங்கள் விரும்பவில்லை’ என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய திருமுருகன்காந்தி, “பா.ஜ.க வன்முறையை நேசிக்கிறது என்றும், அதை மக்கள் அறிந்து கேட்கையில் வன்முறைக்கு ஆளாக்கி சாலையில் தள்ளப்பட்டனர் என்றார். மேலும், தமிழ்நாடு தான் இந்தியாவிற்கு முன்மாதிரியாக பாஜகவின் போலி பிம்பத்தை அறிந்து விரட்டி அடித்த வரலாறு கொண்டுள்ளது’ என்றார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், “அநீதியை எதிர்க்க வேண்டும் எனவும், வன்முறைக்கு இடம் கொடுத்தால் ஜனநாயக பாழ்படுத்தப்படும் என்றார். இலட்சியங்களால் கட்டப்பட்டுள்ள இந்த அணியை யாரும் அசைத்து பார்க்க முடியாது எனவும் தமிழகம் மதசார்பற்ற பெரியார் மண் என்றார்.

பெரியார் மண்ணில் பா.ஜ.க வின் வித்தைகள் நடக்காது என்றும், வன்முறையை தவிர்த்து எல்லா மக்களை ஒன்றுபடுத்துவோம்’ என்று கி.வீரமணி பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், “ஒட்டுமொத்த தேசத்தையும் இந்து தேசமாக மாற்ற வேண்டும் என்பது தான் பாஜகவின் யுக்தியாக இருப்பதாகவும், அதில் அவர்கள் ஒருபடி மேலே சென்றுள்ளதை திரிபுரா கலவரம் காட்டுவதாக தெரிவித்தார்.

மேலும், “சந்தர்ப்பவாத அதிமுக, பாமக கட்சியால் தமிழகத்தில் சில சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க பெற்றுள்ளது என்றார். இந்து என்ற சொல்லில் சிறுபான்மை இன மக்களை சாதி அடிப்படையில் ஒன்று திரட்டி மத அரசயலை முன்னெடுக்கிறார்கள் எனவும், இப்படியான சூழலில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கிறது என்றார்.

“2024 தேர்தலுக்காக இப்பொழுதே இடதுசாரகளும், திராவிட இயக்கங்களும் அம்பேத்கரிய இயக்கங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் அரைகூவல் விடுப்பதாக திருமாவளவன் தெரிவித்தார். மெத்தனமாக இருந்தால், 2024ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது என்றார். எனவே, அனைத்து ஜனநாயக சக்திகளும் தேசிய அளவில் ஒன்றிணைய வேண்டும். அவற்றை ஒன்றிணைக்கும் பொறுப்பு தமிழக தலைவர்களுக்கும், இடதுசாரி தலைவர்களுக்கும் உள்ளது என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில்,”வேலையும், நீதியும் கேட்கும் மக்களும், இளைஞர்களும் போராடினால் போராடத்தை எப்படி தடுப்பது என தெரியாமல் வன்முறையை ஏவி விடுகிறது பாஜக என்றும், இன்னும் மூன்று ஆண்டில் பாஜக என்ற கட்சி இருந்ததற்கான அடையாளம் என்ற ஒன்றே இருக்காது என்றார்.

10 சதவீத இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவு..

தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு..

Recent Posts