தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்தும், 4 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
‘1. சென்னை மாநகரக் காவல் ஆணையராகப் பதவி வகித்துவரும் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள சங்கர் ஜிவால், டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
- தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் தலைவராகப் பதவி வகித்து வரும் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள ஏ.கே.விஸ்வநாதன், டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
- சிவில் சப்ளை சிஐடியாகப் பதவி வகித்து வரும் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள ஆபாஷ்குமார், டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
- உளவுத்துறை கூடுதல் இயக்குநராகப் பதவி வகித்து வரும் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள டி.வி.ரவிச்சந்திரன், டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக உள்ள ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள சீமா அகர்வால், டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
- சென்னை தலைமையக ஏடிஜிபி கே.ஷங்கர், நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் ஜி.வெங்கடராமன், சென்னை தலைமையக ஏடிஜிபியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- தொழில்நுட்ப சேவைப் பிரிவின் ஏடிஜிபியாகப் பதவி வகித்துவரும் அமரேஷ் பூஜாரி, சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- மாநிலக் குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் வினித் தேவ் வாங்க்டே, தொழில்நுட்ப சேவைப் பிரிவு ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பைக் கவனிப்பார்.
- சென்னை குற்றப்பிரிவின் ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் மகேஷ் குமார் அகர்வால், செயலாக்கப் பிரிவின் ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பைக் கவனிப்பார்.
- சிபிசிஐடி சிறப்பு விசாரணைக் குழுவின் ஐஜியாகப் பதவி வகித்து வரும் கபில் குமார் சரத்கர், செயலாக்கப் பிரிவின் ஐஜியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்’.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.