குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்திற்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ : இந்திய வானிலை ஆய்வு மையம்..

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைவதால் தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகருவதால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, குமரி. நெல்லை, தூத்துக்குடியில் இன்று கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை : அடுத்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்..

கோயிலில் அவமதிப்பதாக முறையிட்ட பெண்:அந்தப் பெண்ணுடனே உணவருந்திய அமைச்சர் சேகர்பாபு..

Recent Posts