சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி தெய்வசிகாமணி தொடக்கப்பள்ளியில் இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களை வரவேற்று அசத்தியது குன்றக்குடி கோயில் யானை சுப்புலெட்சுமி.
கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு 18 மாதங்களுக்குப் பிறகு இன்று தமிழகமெங்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. குன்றக்குடி தெய்வசிகாமணி தொடக்கப்பள்ளி மாணவர்களை வரவேற்று உற்சாகப்படுத்தியது குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோயில் யானை சுப்புலெட்சுமி .
இந்நிகழ்ச்சியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் குழந்தைகளுக்கு பூ கொடுத்து வரவேற்றார். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பும், பிஸ்கட் பாக்கெட் வழங்கி ஆசி வழங்கினார். பள்ளி குழந்தைகள் உற்சாகமடைந்தனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்