தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஸ்ரீஅரிகோட்டாவிற்கும்- காரைக்காலுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையைக்கட்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பில்லை இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 130கி.மீ தொலையிலும், புதுச்சேரியிலிருந்து வடகிழக்கு திசையில் 150 கி.மீ தொலைவிலும் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
இதனால் நேற்று இரவிலிருந்தே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை இன்னும் சிலமணி நேரங்கள் நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடந்துசெல்ல உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.