தேனி மாவட்டத்தில் விருமன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நடிகர் கார்த்தி தன் ரசிகரை வரவழைத்து திருமண வாழ்த்து தெரிவித்து வியப்பில் ஆழ்த்தினார்.
நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகரும், சிவகங்கை மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்ற துணைத் தலைவருமான விஜய் என்ற விஜயேந்திரன் திருமணம் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி நடைபெற்றது. கரோனா பெருந்தொற்றால் நடிகர் கார்த்தி இந்த திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் தற்போது தேனியில் நடைபெறும் படப்பின்போது தனது ரசிகரும் மக்கள் நல மன்ற மாவட்ட நிர்வாகி விஜயேந்திரன்- இந்து அபிநயா இருவரையும் நேரில் வரவழைத்து திருமண தம்பதிகளை வாழ்த்தினார்.
தன் ரசிகர் திருமணத்திற்கு செல்ல இயலாத காரணத்தால் அவரை நேரில் அழைத்து வாழ்த்து கூறியதை கார்த்தி ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்