காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரி 75-ஆம் ஆண்டு பவள விழா :கோலாகலமாகத் தொடங்கியது..

கல்விவள்ளல் அழகப்பச் செட்டியாரால் 1947-ஆம் ஆண்டு காரைக்குடியில் தொடங்கப்பட்ட அழகப்பா அரசு கலைக்கல்லுாரியின் 75-ஆம் ஆண்டு பவள விழா இன்று தொடங்கியது.
இந்தியா சுதந்திரம் பெற்ற வருடம் தொடங்கிய அழகப்பா அரசு கலைக்கல்லுாரி மாபெரும் விருட்சமாக வளர்ந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கியுள்ளது.

அழகப்பா பொறியியல் கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரி என விரிந்து அழகப்பா பல்கலைக்கழகமாக உருவெடுத்துள்ளது.
அழகப்பா அரசு கலைக்கல்லுாரி 75-வது பவள விழா ஆண்டு தொடக்கவிழா இன்று 07.12.2021 கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள உமையாள் அரங்கில் வெகு விமர்சையாகத் தொடங்கியது. இந்த ஆண்டு முழுவதும் இக்கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.
பவள விழாவினை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
விழாவை தொடங்கி வைத்து அவர் உரைநிகழ்த்தும் போது கல்வி வள்ளலின் பெருமையையும் கல்லுாரின் வளர்ச்சி பற்றியும் பேசினார்.


விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மாணவருமான திரு.மாங்குடி பேசும் போது இந்த பவள விழா ஆண்டில் முன்னாள் மாணவர்கள், முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் பணிபுரிந்த அனைவரும் கல்லுாரி வளாகத்தில் சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படுவதாகத் தெரிவித்தார். விரைவில் அதற்கான தேதியும் அறிவிக்கப்படும் என்றார்.
விழாவில் கலந்து கொண்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி பேசும் போது கல்லுாரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என அறிவித்தார்.
முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாணவருமான தென்னவன் அவர்கள் கல்லுாரி கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், முன்னாள் மாணவருமான முனைவர் சுப்பையா அவர்கள் கலந்து கொண்டு கல்லுாரியின் வளர்ச்சி பற்றியும், அதன் சிறப்புகள் பற்றி பேசினார். விழாவில் இழுப்பைக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் வைரமுத்து அன்பரசு உள்பட பேராசிரியர்கள்,கல்லுாரி மாணவர்கள்,பணியாளர்கள் பொதும்களும் கலந்து கொண்டனர்.
முனைவர் ப.உதயகணேசன் நன்றியுரை வழங்கினார்.

செய்தி &படங்கள்
சிங்தேவ்

3வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் பட்டியல்:ராகுல் காந்தி வெளியிட்டார் .

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர்,நடத்துனர் மீது நடவடிக்கை..

Recent Posts