சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கே.எம்.சி மருத்துவமனை சார்பில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காகவும் நம் இந்திய தேசத்தில் 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி சாதனையை வலியுறுத்தி இன்று 19.12.2021 அன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் ஆண்கள் 3 பிரிவுகளாகவும்,பெண்கள் பிரிவாகவும் மொத்தம் 1200 பேர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்பரிசாக ரூ.7500, இரண்டாம் பரிசாக ரூ.5000,மூன்றாம் பரிசாக ரூ.2500 வழங்கப்பட்டது.
பரிசுகளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் முன்னாள் அமைச்சர் தென்னவன்,காரைக்குடி நகர ஆணையாளர் லெட்சுமணன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
முன்னதாக என்.சி.சி (9) பட்டாலியன் கமெண்டென்ட் கர்ணல் திரு.ரஜினிஸ் பிரதாஸ் மற்றும் சிஆர்பிஎப் துணை கமெண்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். விழாவினை கேஎம்சி மருத்துவமனை சிறப்பாக நடத்தியது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்