அனைவரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதையே இந்து மதம் போதிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் ரேபரேலி தொகுதியில் மக்களுடன் சந்திப்பு மற்றும் தீவிர பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபட்டு வருகிறார்.
இன்று அவரை சந்தித்த செய்தியாளர்கள் ராகுல்காந்தியின் இந்துத்துவா கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பிரியங்கா பேசியதாவது:ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் மதத்தை பயன்படுத்தி அரசியல் செய்கின்றனர். அவர்கள் செல்லும் பாதை நீதி நேர்மை இல்லாதது. அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும், நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்து மதம் போதிக்கிறது. இந்த வேறுபாட்டைத்தான் ராகுல்காந்தி மக்களுக்கு எடுத்து காட்ட முயற்சிக்கிறார். இவ்வாறு பிரியங்கா காந்தி விளக்கம் அளித்தார்