ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
கேள்வி-நேரத்தின்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும், ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவிலே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். சட்டப்பேரவையில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர் பத்திரிகைகளிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரையில், சென்ற ஆட்சியிலே தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 3-8-2001 அன்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலே, 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறிவிட்டது.