கோட்டையூர் பேரூராட்சி 8-வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நவீன தொழில்நுட்பத்துடன் அசத்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களைக் கவர பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்காளர்களைக் கவர பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள கோட்டையூர் பேரூராட்சியில் 8-வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வேலங்குடி.D.பாண்டித்துரை நுாதன முறையில் பரப்புரை செய்து மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார். நவீன் தொழில்நுட்பங்கள் வழியே மக்களிடம் தன் கருத்தைக் கொண்டு செல்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் கோட்டையூர் 8-ம் வார்டில் பாஜக வேட்பாளராக வேலங்குடி பாண்டித்துறை களமிறக்கப்பட்டுள்ளார். பாண்டித்துறை 8-வார்டு மக்களிடம் மிக தோழமையாக பழகி அவர்களின் குறைகளைக் கேட்டறிவதுடன், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாக கூறி வாக்கு சேகரித்தார். அவரின் அணுகுமுறை கோட்டையூர் 8-வார்டு மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக வேட்பாளர் வேலங்குடி பாண்டித்துரை கூறும் போது:- கோட்டையூர் பேரூராட்சியை தமிழகத்தின் முதல் பேரூராட்சியாக மாற்றுவதே என் இலட்சியம் என்றார். அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து வாழும் கோட்டையூரை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதே இலக்கு என்றார்.
கோட்டையூர் 8-வது வார்டில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தேன். பா.ஜ.க கொடியைப் பார்த்ததும் மக்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் நான் வெற்றிபெற வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
குறிப்பாக நான் வாக்குசேகரிக்கச் செல்லும் போது “I Don’t go out” ஆங்கிலத்தில் பேசி அசத்திய பாட்டியிடம் ஆங்கிலத்தில் வாக்கு சேகரிக்க டிப்ஸ் பெற்றுக்கொண்டேன்.
8-வார்டு மக்களுக்கு தேவையான குறைகள் அனைத்தையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என்று கூறி அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்.
சிறு வயதில் அப்பாவை இழந்த எனக்கு ஆதரவாக இருந்தது நகரத்தார் குடும்பம்தான். இன்றும் நகமும் சதையுமாகத்தான் நாட்டாரும் நகரத்தாரும் இருக்கிறோம் என்றார்.
வேலங்குடி பாண்டித்துறையின் அசத்தல் பரப்புரையால் தாமரை மலரும் என்கின்றனர் கோட்டையூர் பேரூராட்சி மக்கள்..
செய்தி & படங்கள்
சிங்தேவ்