தமிழக இளைஞர்களே அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்த ஓர் வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?…

முதல்வர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலை – இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் – திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, அரசுப் பணிகளில் அமர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில், தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்
முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு, தமிழகத்தில் இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி பயன்படுத்தும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம், இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் ஊக்க ஊதியத்துடன் இரண்டு ஆண்டுகள் பயிற்சி வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

அந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு பயிற்சிகளை வழங்குவதற்காகவே திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

திறன்மிகு இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்தி நிர்வாக செயல்முறைகள் மற்றும் சேவை வழங்கலின் செயல்படுத்துதலை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.

தமிழக இளைஞர்களுக்கு நற்செய்தி: அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்த ஓர் வாய்ப்பு; விண்ணப்பிப்பது எப்படி?

மலேசியா : தேசம் ஊடகவியலாளர் விருதளிப்பு விழா : மூத்த புகைப்படக்கலைஞர் பி. மலையாண்டி கெளரவிப்பு…

ஜூன் 13-ல் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு : பள்ளிகல்வித்துறை அறிவிப்பு..

Recent Posts