சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் ( Central Electrochemical Research Institute (CECRI) சிக்ரியின் 75-வது நிறுவன நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிக்ரியின் 75 ஆம் ஆண்டு நிறுவன நாளை (25.07.2022) முன்னிட்டு ஜிக்யாசா எனும் மாணவர் விஞ்ஞானி தொடர்பு திட்டத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி சிக்ரியிலுள்ள கலையரங்கில் நடைபெற்றது. மற்றும் விஞ்ஞான விழிப்புணர்வு பேரணி காரைக்குடியில் உள்ள கண்ணதாசன் மணி மண்டபத்தில் இருந்து சிக்ரி வரை நடைபெற்றது.
இந்த பேரணியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உயர்திரு மதுசூதனன் ரெட்டி அவர்கள் சிக்ரியின் இயக்குநர் முனைவர் ந. கலைச்செல்வி அவர்கள் முன்னிலையில், காரைக்குடி நகர மன்றத் தலைவர் திரு. முத்துத்துரை அவர்களும் தொடங்கி வைத்தார்கள்.
காரைக்குடியில் உள்ள 12 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேரணியில் கலந்து கொண்டு அறிவியல் செய்திகளையும் சிக்ரியின் 75 ஆண்டு ஆராய்ச்சி மூலமாக மக்களுக்கு ஆற்றிய சேவைகளையும் தாங்கிய பதாகைகளை ஏந்தி வந்தார்கள்.
இந்த நிகழ்ச்சிகளை மாணவர் விஞ்ஞானி தொடர்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச.அங்கப்பன் மற்றும் திட்டமிடல் துறையின் தலைவர் ச.சத்தியநாராயணன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்