சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 7-ஆம் விளையாட்டுப் போட்டிகள் இன்று (23.07.22) சனிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவிற்கு கல்லுாரி தாளாளர் சேது.குமணன் தொடக்க உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் உள்ள 27 தனியார் வேளாண் கல்லுாரிகளில் சேதுபாஸ்கரா வேளாண் கல்லுாரியில் தான் தேசிய மாணவர் படை( N.C.C) தொடங்கப்பட்டு செயல் பட்டுவருகிறது. நான் கல்லுாரியில் படிக்கும் காலத்தில் என்.சி.சியில் சேர ஆசைப்பட்டேன்,வாய்ப்பு கிடைக்கவில்லை . தற்போது பயிலும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்த சேதுபாஸ்கரா வேளாண் கல்லுாரி என்.சி.சி அமைப்பை தொடங்கியுள்ளது என்றார்.
மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் உடலும்,மனமும் ஆரோக்கியம் பெற விளையாட்டு அவசியம் என்று எடுத்துரைத்தார்.
ஆண்டுவிழா விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிய சிறப்பு விருந்தினர் உதவி காவல் ஆணையர்( Asst Inspector Gentral of police-Welfare) திரு.ஆர். இராமகிருஷ்ணன், ஐ.பி.எஸ் அவர்கள் பேசும் போது மாணவர்கள் கடுமையான உழைப்பு,நற்பண்பு,நேர்மை இவை இருந்தால் எந்த ஒரு உயர்நிலையையும் அடைய முடியும் என்றார். வேளாண் கல்லுாயில் பயின்ற பலர் இன்று ஐஏஎஸ்,ஐபிஎஸ் பதவிகளை அலங்கரித்து வருகின்றனர். இன்றைய தமிழக தலைமை செயலாளார் வே.இறையண்பு ஐஏஎஸ்,அவர்களும் , தமிழக காவல் துறை தலைமை ஆணையர் சைலேந்திரபாபு ஐபிஎஸ், அவர்களும் வேளாண் பட்டதாரிகள்தான் என்றார்.
விழாவில் பேசிய மற்றொரு சிறப்பு விருந்திரான அர்ச்சுனா விருது பெற்றவரும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆக்கி அணிக்கு தலைமை தாங்கி தங்கப்பதக்கம் வென்றவருமான திரு.முகமது ரியாஸ் பேசும் போது, நான் அரசு பள்ளியில் பயின்ற மாணவன் என்றார். கடின உழைப்பால் இந்திய ஆக்கி அணிக்குத் தேர்வானேன், அப்போது இட்லி சாப்பிடுபவர்கள் பலமாக இருக்கமாட்டார்கள் என்றார்கள். எனது கடின உழைப்பால் இந்திய ஆக்கி அணிக்கு தலைமை தாங்கி தங்கப்பதக்கம் வென்றோம், கடின உழைப்பும்,விடா முயற்சியும் இருந்தால் நீங்களும் சாதனையார்களாக மாறலாம் என்றார்.
முன்னதாக கல்லுாரி முதல்வர் கருணாநிதி வரவேற்றார். கல்லுாரி இயக்குனர் பி. கோபால் நன்றி தெரிவித்துப் பேசினார்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்