மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று உச்ச நிகழ்வான கள்ளழகர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி துவங்கி 14 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றுவது வழக்கம். ஒன்பதாம் நாளான இன்று, விழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தேவி, பூதேவி சமேதராக கள்ளழகர் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார்.கோயிலின் வெளி கோட்டை சுவரை ஒட்டி உள்ள வீதியில்,சுமார் 2 மணி நேரம் தேரோட்ட விழா நடைபெற்றது.விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.