36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்…

6 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட்.
சுமார் 5,805 கிலோ எடை கொண்ட 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட். வணிக நோக்கில் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்துக்கு சொந்தமான செயற்கைக்கோள்களை இந்த மிஷனில் சுமந்து சென்றுள்ளடக்கு ஜிஎஸ்எல்வி மார்க்-3.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதில், வணிக நோக்கில் செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மூலம் விண்ணில் செலுத்த, இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. முதல்கட்டமாக, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக் கோள்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்நிலையில், 2-வது கட்டமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்கள் இன்று (மார்ச் 26) காலை 9 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி : பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது

ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்., கட்சியினர் தடையை மீறி போராட்டம்..

Recent Posts