தமிழ்நாடு அரசு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கருணாநிதி நூற்றாண்டு விழா, மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் விவரம்:
உயர் கல்வித் துறை செயலாளராக இருந்த கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்நடைத் துறை செயலாளராக இருந்த கார்த்திக், உயர் கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலாளராக இருந்த மங்கத் ராம் சர்மா, மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நல்வாழ்வு துறை சிறப்பு செயலாளராக இருந்த ரீட்டா ஹரிஷ் தாக்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி வருவாய் மற்றும் நிதித் துறை துணை ஆணையராக இருந்த விசு மகாஜன், மின்சார வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சாலைத் திட்ட இயக்குநர் அண்ணாதுரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிய கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ்.பிரபாகர், தமிழ்நாடு சாலைத் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் இளம் பகவத், மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், கலைஞர் நூற்றாண்டு விழாவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.