தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர், மயிலாடுதுறையில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யகூடும்.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (03.07.2023) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (03.07.2023) 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திருவள்ளூர், சென்னையில் நாளை கனமழை பெய்யக்கூடும். காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் கனமழை பெய்யகூடும்.
நாளைமறுநாள் (04.07.2023) 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரியில் கனமழை பெய்யகூடும். சென்னையில் பொறுத்தவரை, இன்றும் நாளையும் நகரின் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.