தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை : காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
காவல்துறை உயர் அதிகாரிகள் டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
குற்றச்செயல்களை தடுப்பது, கஞ்சா, சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்பது குறித்து உயரதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி வருகிறார். சொத்து தொடர்பான குற்றங்கள், குடும்ப வன்முறை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் காவல்துறையினரின் பிரச்சினைகள், சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியுடன் பாஜக ஆலோசனை : அதிமுக, பாமக, தாமக கட்சிகளுக்கு அழைப்பு..

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக ₹127 கோடி சொத்து சேர்த்த வழக்கில் குற்றப்பத்திரிகை…

Recent Posts