தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விண்ணப்பங்களைப் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்,நகர்புற உள்ளாட்சித்தறை அமைச்சர் கே.என். நேரு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எந்த இடையூம் இல்லாமல் மாதந்தோறும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1000 தடையில்லாமல் செலுத்தப்படும். கலைறுர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து சிலர் திட்டமிட்டு தவறான கருத்துகளை தெரிவித்து வருகின்றன என்று முதல்வர் குறிப்பிட்டார்.