காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் புதியதாக APOLLO REHABILITATION CENTER மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. 03.08.2023 -தேதியன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் மறுவாழ்வு மையத்தை தொடங்கி வைத்தார்.
அப்பலோ ரீச் மருத்துவமனை, காரைக்குடி அதனைத்சுற்றியுள்ள கிராமங்கள் அண்டை மாவட்ட மக்களுக்கு குறைந்த செலவில் நிறைவான மருத்துவசேவை வழங்கிவருகின்றது. நவீன மருத்துவத்தில் தலைசிறந்து விளங்குகிறது.
மறுவாழ்வு சிகிச்சை என்பது காயங்கள் கடுமையான மற்றும் நாள்பட்ட நோய்கள் உட்பட நோய்களின் தாக்கத்தை பெருமளவு குறைக்க உதவும்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள அப்பலோ மறுவாழ்வு மையம் காயங்கள் மற்றும் அதிர்ச்சி,எலும்பு முறிவுகள்(உடைந்த எலும்புகள்), அதிர்ச்சிகாரமான மூளைக்காயம் மற்றும் முதுகுத் தண்டு காயங்கள். பக்கவாதம், கடுமையான தொற்று நோய்கள்,பெரிய அறுவை சிகிச்சை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
இந்த மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கென தனி அறை.பொதுவார்டு,நரம்பியல் மறுவாழ்வு, நர்சிங் ஆதரவு,உணவியல் நிபுணர் ஆதரவு,மறுவாழ்வு அமைப்பு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் செயல்படுகிறது.
பிசியாட்ரிஸ்ட் சிகிச்சை,பேச்சு சிகிச்சை, பிஸியோதெரபி சிகிச்சை மிகக் குறைந்த செலவில் வழங்கப்படுகிறது.
இந்த மறுவாழ்வு மையத்தில் விபத்தால் மூளை பாதிக்கப்பட்டு கோமோ நிலையிலிருந்த மதுரையைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது முற்றிலும் குணமாகியுள்ளார். இதுபோல் சாலை விபத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோமோ நிலையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் தற்போது உணர்வு பெற்று மெல்ல மெல்ல குணமாகிவருகிறார்.
மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் மூளை மற்றும் நரம்பு பாதிப்படைந்தவர்களுக்கு பல்வேறு வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு சிறிய மைதானத்தில் காலில் உணர்வு ஏற்படுத்த நான்கு விதமான சிகிச்சை வழங்கப்படுகிறது. புல்தரையில் நிற்க வைப்பது, மணல் தரையில் நிற்க வைப்பது,கூழாங்கற்கள் மீது நிற்க வைப்பது. மேடு,பள்ளம் ஏற்படுத்தி அதை உணரவைக்கும் முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்து மருத்துவச் சிகிச்சைமையத்தை பார்வையிட்டார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக நரம்பியல் நிபுணர் டாக்டர்.கெவின் ஜோசப், அப்பலோ சிறப்பு மருத்துவமனை, மதுரை. திரு பி.நீலகண்ணன், சிறப்பு முதன்மை அதிகாரி அப்பலோ மருத்துவக் குழுமம் மதுரை, மனநலமருத்துவர்கள் டாக்டர் டி.பாலமுரளி, டாக்டர்.புருனோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
மறுவாழ்வு மையத் தொடக்கவிழா ஏற்பாடுகளை அப்பலோ ரீச் மருத்துவமனை முதன்மை அதிகாரி லாவண்யா,மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் டாக்டர் கோகுல், டாக்டர் திருப்பதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்