வரும் அக்டோபர்-23-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அக்டோபர் 20-ம் தேதி வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது,
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென்கிழக்கு வங்க கடலில் இலங்கை முழுவதும் கொமோரின் பகுதி வரை செல்கிறது.
அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற வட மேற்கு திசையில் நகரும் என வானிலை மையம்தெரிவித்துள்ளது.